நேற்றிரவு தொடங்கிய மழை இந்த நிமிடம் வரை பலத்த மழையாக தொடர்ந்து பெய்து கொண்டு இருப்பதால், பரங்கிப்பேட்டையின் தாழ்வான பகுதிகள் அனைத்திலும் தண்ணீர் புகுந்துள்ளது, இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், நமது சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும், தில்லி சாஹிப் தர்கா, கருணாநிதி சாலை பகுதி மக்கள் வீடுகளில் தங்க முடியாமல் தவிக்கின்றனர். ஷாதி மஹாலில் திருமணம் இருப்பதால், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தங்க வைக்கும் பணிகளில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் இன்று அதிகாலை 4 மணி முதல் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறனர்.
No comments:
Post a Comment