Saturday, June 4, 2011
மீண்டும் வருகிறது ஜெயலலிதாவின் 'செல்லத் திட்டம்' மோனோ ரயில்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் செல்லத் திட்டமான மோனோ ரயில் திட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது ஆளுநர் உரை.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின்போது மோனோ ரயில் திட்டத்தை அறிவித்தார் ஜெயலலிதா. இருப்பினும் அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அடுத்து வந்த திமுக அரசு, மோனோ ரயில் திட்டத்தை நிராகரித்து விட்டது. அதற்குப் பதிலாக மெட்ரோ ரயில் திட்டத்தை அது அறிவித்து அதே வேகத்தில் தொடங்கி விட்டது.
மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் மறுபடியும் மோனோ ரயில் திட்டத்திற்கு அரசு உயிர் கொடுத்துள்ளது.
இதுகுறித்து இன்று ஆளுநர் பர்னாலா ஆற்றிய உரையின்போது கூறுகையில்,
சென்னையில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். முதல் கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும்.
தற்போது நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிய கால தாமதமாகும் என்பதால் மோனோ ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
படிப்படியாக 300 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயிலின் தூரம் அதிகரிக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோமீட்டருக்கு மட்டுமே அமல்படுத்தப்படும்.
சென்னையைப் போலவே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)