பரங்கிப்பேட்டையின் பொழுதுபோக்கு தளம்..

Friday, December 17, 2010

வெள்ளாற்று தரைப்பாலம் சேதம் கலெக்டர் சீத்தாராமன் பார்வை


திட்டக்குடி : திட்டக்குடியில் வெள் ளத்தால் சேதமடைந்த வெள்ளாறு தரைப்பாலத்தை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டார். அண்மையில் பெய்த கன மழையால் திட்டக்குடி வெள்ளாறில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களை இணைக்கும் திட்டக்குடி தரைப்பாலம் பெயர்ந்து பள்ளமாக மாறியதால் அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு தொழுதூர் மார்க்கமாக திருப்பி விடப்பட்டது. இந்நிலையில் நேற்று திட்டக்குடி வருகை தந்த கலெக்டர் சீத்தாராமன் பழுதடைந்த தரைப்பாலத்தை பார்வையிட்டு பழுதான தரைப்பாலத்தினை விரைந்து சீரமைத்து பஸ் போக்குவரத்து உடனடியாக துவங்கவும், தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தாசில்தார் கண்ணன், துயர் துடைப்பு தாசில்தார் சையத்ஜாபர், பாசன சங்கத் தலைவர் வேணுகோபால், தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு, இளைஞர் காங்., ராஜ்குமார் உடனிருந்தனர்.

Thursday, December 16, 2010

பெட்ரோல் விலை உயர்வு ம.தி.மு.க., கண்டனம்

கடலூர் : பெட்ரோல் விலையை உயர்த்தியதற்கு கடலூர் மாவட்ட ம.தி.மு.க., செயலாளர் என்.ஆர். ராமலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் பாதித் துள்ளனர். தற்போது பெட்ரோல் விலை உயர்வால் அத்தியவாசிய பொருட்களின் விலை மேலும் உயரும். கடந்த மாதம் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

Wednesday, December 15, 2010

கும்மத்துபள்ளி ஆசிரியர் நியமனத்திற்காக திருமாவளவனிடம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை















பரங்கிப்பேட்டை: கும்மத்துப்பள்ளி நடுநிலைப்பள்ளியில் சில பாடபிரிவுகளுக்கு எந்த ஆசிரியரும் இல்லை என்பதற்கும் ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் நீண்ட விடுப்பில் சென்று இதுவரை பணிக்கு திரும்பாததற்கும் உடனே நடவடிக்கை எடுக்க கோரி பரங்கிப்பேட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிதம்பரம் பாரளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இக்கோரிக்கையை பரங்கிப்பேட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி நசுருத்தீன் பாரளுமன்ற உறுப்பினரிடம் வழங்கினார்.

நன்றி ..crescent

Thursday, December 9, 2010

சவூதியின் கட்டுமான நிறுவனமான Archirodon Ltd. ல் பல்வேறு பணிகளுக்கு நேர்முக தேர்வு (ஊதிய விபரத்துடன்)

50 வருடங்களுக்கு மேலாக கட்டுமான துறையில் சிவில், மெக்கானிகல் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறையில் அனுபவமுள்ள சவூதியை சார்ந்த ஆர்கிரோடான் நிறுவனத்தில் கீழ்காணும் பதவிகளுக்கு நேர்முக தேர்வு கொச்சியில் நடைபெற உள்ளது. கட்டுமான துறையில் 5 வருடங்களுக்கு குறைவான அனுபவம் உள்ளவர்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.


FOR FURTHUR INFORMATION CONTACT - JOHNSON : 044-22310757

ARAFA WORLD TOURS, NO. 407, M.K.N ROAD, ALANDUR, CHENNAI – 600016

LAND MARK – NEAR HOTEL HEERA, NEAREST RAILWAY STATION - ST THOMAS MOUNT, EMAIL: arafachennai@yahoo.com

FOR ALL THE ABOVE CATEGORIES FOOD / ACCOMMODATION / TRANSPORT MEDICAL / INSURANCE WILL BE PROVIDED BY THE COMPANY.

தேர்வாகும் அனைத்து நபர்களுக்கும் உணவு / இருப்பிடம் / வாகன வசதி / மருத்துவ வசதி / காப்பீடு முதலியவை நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும்


13.12.10 & 14.12.10 அன்று நடைபெறும் நேர்முக தேர்வில் கீழ்காணும் பதவிகளுக்கு Interview நடைபெறும்



சம்பள விகிதம் : 1000 - 2000 US Dollar

CATEGORIES : QA/QC PERSONEL, VARIOUS PROFESSION OF ENGINEERS

SALARY (1000 – 2000 US$)

QA-QC

1. COATING INSPECTORS

2.QA-QC ENGINEERS

3.QA-QC INSPECTOR

4. QC INSPECTOR

5. WELDING INSPECTORS


VARIOUS ENGINEERS

1.CONSTRUCTION MANAGERS

2.CONTRACT ADVISORS

3.CHEMICAL ENGINEERS

4.CIVIL ENGINEERS

5.DESIGN ENGINEERS

6.PLANNING ENGINEERS

7.MARINE ENGINEERS

8.SITE ENGINEERS CIVIL

9.STRUCTURAL ENGINEERS

10.WORKSHOP ENGINEERS FOR HEAVY / MARINE EARTH MOVING EQUIPMENT

11.ENVIRONMENTAL ENGINEERS

12.QUANTITY SURVEYORS

13.MATERIAL LAB ENGINEERS

14.SURVEYOR ENGINEER

15.SAFETY ENGINEER / INSPECTORS

16.12.10 & 17.12.10 அன்று நடைபெறும் நேர்முக தேர்வில் கீழ்காணும் பதவிகளுக்கு Interview நடைபெறும்

சம்பள விகிதம் : 700 - 1000 US Dollar


CLIENT Interview on 16-12-2010 & 17-12-2010 at KOCHI for following categories

CATEGORIES. COMMERCIAL STAFF, SALARY ( 700 – 1000 US$ )

1. ACCOUNTANTS

2. ADMINISTRATORS

3. SECRETARY

4. CASHIER

5. STORE KEEPERS

20.12.10 & 21.12.10 அன்று நடைபெறும் நேர்முக தேர்வில் கீழ்காணும் பதவிகளுக்கு Interview நடைபெறும்

சம்பள விகிதம் : 1000 - 2000 US Dollar

CLIENT Interview on 20-12-2010 & 21-12-2010 at KOCHI for the following CATEGORIES

CATEGORIES: ELECTRO MECHANICAL ENGINEERS, SALARY ( 1000 - 2000 US$ )

1.ELECTRICAL ENGINEERS

2.INSTRUMENTATION ENGINEERS

3.MECHANICAL ENGINEERS

4.MECHANICAL ENGINEERS PLANT MAINTENANCE AND HVAC.

5.FOREMAN ELECTRICAL

6.FOREMAN PIPING / PIPE FITTING

நன்றி..... ismailpno

குவைத்தில் உடனடியாக Safety Officer தேவை

குவைத் : குவைத்தில் உள்ள கட்டுமான நிறுவனமான RECAFCO (Real Estate Construction and Fabrication Company) க்கு Safety Officer / Safety Engineer உடனடியாக தேவை. கண்டிப்பாக அவர் குவைத்தில் Transfer Visa உள்ளவராக, குவைத்தில் பணியாற்ற கூடியவராக இருக்க வேண்டும். குவைத் சுர்ரா அருகே உள்ள இந்நிறுவனத்தின் Projectல் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் Bio-Data வை அனுப்பவும்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : அப்துல் ஹமீது : +965 -97181864

தகுந்த கல்வியறிவுடன் பணி அனுபவமும் உள்ளவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும். இந்தியர்கள் அதிகமுள்ள இந்நிறுவனத்தில் சுமார் 450 - 500 KD சம்பளம் திறமைக்கேற்ப கிடைக்கும்.


நன்றி.. ismailpno