Tuesday, July 24, 2012
Thursday, November 10, 2011
இன்று 11-11-11 எதைச் செய்தாலும் சிறப்புதான்..
இன்றைய தினம் அரிதான தினமாகும். ஆறு ஒன்றினைக் கொண்டு அதாவது 11-11-11 என அனைத்தும் ஒன்றாக கொண்டு வந்துள்ள இந்தநாளினை உலகத்தின் சிறப்பு வாய்ந்த நாளாக பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மற்ற நாட்களை விட நான்கு நாட்கள் ஒன்றினை எண்ணாக கொண்டு வந்துள்ளன. ஜனவரி மாதத்தில் வந்த 1-1-11 , 11-1-11 ஆகிய தேதிகளும் நவம்பர் மாதத்தில் 1-11-11 வந்த தேதியும் 4 அல்லது 5 ஒன்றினை மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் இன்றைய தினமான 11-11-11 மொத்தம் 6 ஒன்றினை கொண்டுள்ளது. நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்தநாள் வரும் என்பதே இதன் சிறப்பம்சமாகும். எனவேதான் நவம்பர் மாதம் 11ம் தேதியை உலகம்முழுவதும் சிறப்பு வாய்ந்தநாளாக கருதுகின்றனர். இந்தநாளில் 11 மணி 11 நிமிடம் மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். அதாவது 11-11-11, 11:11 அந்த நிமிடத்தை பல விதங்களில் கொண்டாட திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
Friday, October 21, 2011
முஹமது யூனுஸ் வெற்றி!
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத்திற்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் 6 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முதல் சுற்றிலிருந்தே தி.மு.க. வேட்பாளர் முஹமது யூனுஸ் முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து முன்னனியில் இருந்த இவர் கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கைப்படி 1369 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஆர். ஜெகநாதன் இரண்டவது இடத்தையும், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் மாரிமுத்து 3-வது இடத்தையும் பிடித்து தோல்வியை தழுவினர்.
நன்றி: MYPNO
Sunday, October 16, 2011
முகேஷ் அம்பானி ஆர்டர் செய்த உல்லாசபடகு ( yacht ) அடேங்கப்பா!!!!!!!!
முகேஷ் அம்பானி ஆர்டர் செய்த உல்லாசபடகு ( yacht )அடேங்கப்பா!!!!!!!!
விரைவில் அரபிக்கடலில் அழகு பெட்டகமாக மிதக்க கூடிய இந்த யூரோ உல்லாச படகு 20 மில்லியன்(ப்பூ..இவ்வளவு சிக்கனமாகவா) செலவில் கட்டப்படுகிறது. இது பிரான்ஸ் &மொனகோர் நாட்டில் உள்ள பெருமைமிக்க கப்பல் கட்டும் கம்பெனி உதவியுடன் மிகப் பிரமாண்டமாக கட்டப்படுகிறது.இதன் நீளம் 58 மீட்டரும் அகலம் 38 மீட்டரும் ஆகும்.
இந்த படகு தரையளவு (floor area)3400 சதுர மீட்டர்(36600 sq.feet)இதில் 12 பேரும் 20 க்ருவ்(வேலை) ஆட்களும் பயணம் செய்யலாம்.
இது க்ரீன்படகு( green yacht) ஆகும் இதில் 900 சதுர மீட்டர் அளவுக்கு சோலார் பவர் தகடு பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பவர் சக்தி 500 kW ( கிலோ வாட்ஸ்) ஆகும்.இதன் மூலம் 20-30% எரி சக்தி சேமிப்பும் மற்றும் 40-50%எலக்ட் ரி சிட்டி உற்பத்தியும் உருவாக்கப்பட்டு உபயோகப்படுத்தவும்படுகிறது.
இதைப்பார்ப்பவர்கள் மூச்சை நன்றாக இழுத்து விட்டு பயிற்சி செய்து படங்களை பார்க்கவும். இதைப் பார்த்துவிட்டு ஒரேயடியாக மூச்சு விட மறந்துவிட்டால் அதற்கு இந்த அவர்கள் உண்மைகள் பதிவுதளம் எந்த பொறுப்பும் ஏற்க முடியாது.
இவ்வளவு செலவு செய்து முகேஷ் அம்பானி இதை வாங்குவது நலம் செய்யும் செயல்தானா?
இதற்கான போட்டோவை பார்த்தவர்கள் உதித்த கருத்துக்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம். இதை அவர்கள் கூறிய வழியிலேயே எந்த வித மாற்றம் இல்லாமல் அப்படியே இங்கே உங்கள் பார்வைக்கு வைத்திருக்குகிறேன்
Saturday, June 4, 2011
மீண்டும் வருகிறது ஜெயலலிதாவின் 'செல்லத் திட்டம்' மோனோ ரயில்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் செல்லத் திட்டமான மோனோ ரயில் திட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது ஆளுநர் உரை.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின்போது மோனோ ரயில் திட்டத்தை அறிவித்தார் ஜெயலலிதா. இருப்பினும் அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அடுத்து வந்த திமுக அரசு, மோனோ ரயில் திட்டத்தை நிராகரித்து விட்டது. அதற்குப் பதிலாக மெட்ரோ ரயில் திட்டத்தை அது அறிவித்து அதே வேகத்தில் தொடங்கி விட்டது.
மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் மறுபடியும் மோனோ ரயில் திட்டத்திற்கு அரசு உயிர் கொடுத்துள்ளது.
இதுகுறித்து இன்று ஆளுநர் பர்னாலா ஆற்றிய உரையின்போது கூறுகையில்,
சென்னையில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். முதல் கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும்.
தற்போது நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிய கால தாமதமாகும் என்பதால் மோனோ ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
படிப்படியாக 300 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயிலின் தூரம் அதிகரிக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோமீட்டருக்கு மட்டுமே அமல்படுத்தப்படும்.
சென்னையைப் போலவே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, December 17, 2010
வெள்ளாற்று தரைப்பாலம் சேதம் கலெக்டர் சீத்தாராமன் பார்வை
திட்டக்குடி : திட்டக்குடியில் வெள் ளத்தால் சேதமடைந்த வெள்ளாறு தரைப்பாலத்தை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டார். அண்மையில் பெய்த கன மழையால் திட்டக்குடி வெள்ளாறில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களை இணைக்கும் திட்டக்குடி தரைப்பாலம் பெயர்ந்து பள்ளமாக மாறியதால் அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு தொழுதூர் மார்க்கமாக திருப்பி விடப்பட்டது. இந்நிலையில் நேற்று திட்டக்குடி வருகை தந்த கலெக்டர் சீத்தாராமன் பழுதடைந்த தரைப்பாலத்தை பார்வையிட்டு பழுதான தரைப்பாலத்தினை விரைந்து சீரமைத்து பஸ் போக்குவரத்து உடனடியாக துவங்கவும், தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தாசில்தார் கண்ணன், துயர் துடைப்பு தாசில்தார் சையத்ஜாபர், பாசன சங்கத் தலைவர் வேணுகோபால், தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு, இளைஞர் காங்., ராஜ்குமார் உடனிருந்தனர்.
Thursday, December 16, 2010
பெட்ரோல் விலை உயர்வு ம.தி.மு.க., கண்டனம்
கடலூர் : பெட்ரோல் விலையை உயர்த்தியதற்கு கடலூர் மாவட்ட ம.தி.மு.க., செயலாளர் என்.ஆர். ராமலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் பாதித் துள்ளனர். தற்போது பெட்ரோல் விலை உயர்வால் அத்தியவாசிய பொருட்களின் விலை மேலும் உயரும். கடந்த மாதம் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)